அஹில்யாபாய் பிறந்த நாள் விழா
திண்டிவனம்; திண்டிவனத்தில் பா.ஜ., சார்பில் சமூக சீர்திருத்த வாதி அஹில்யாபாய் பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய துப்புரவு ஆணைய கமிஷனர் வெங்கடேசன் பேசினார். கூட்டத்தில், பொதுச்செயலாளர்கள் பாண்டியன், அன்பழகன், மாவட்ட பொருளாளர் பிரேம், வர்த்தகர் அணி ஜின்ராஜ், முன்னாள் பொதுச் செயலாளர் எத்திராஜ், இளைஞரணி தினேஷ்குமார், வழக்கறிஞர் செந்தில், நிர்வாகிகள் முத்துலட்சுமி, சந்திரலேகா, ராதிகா, சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.