அ.ம.மு.க., மாவட்ட செயலர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
விழுப்புரம்; அ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலர் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மாஜி அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலர் குமரன், தலைமையில் ஆதரவாளர்கள் 100 பேருடன் வந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார்.இதில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.இதேபோல், அ.தி.மு.க., செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி ஏற்பாட்டின் பேரில், முருகன் என்பவர் தலைமையில் பா.ம.க., தி.மு.க., கட்சிகளை சேர்ந்த 30 பேர், அ.தி.மு.க., வில் இணைந்தனர். விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சியிலிருந்து 40 பேர் விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். வடக்கு ஒன்றிய செயலர் பன்னீர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.