மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024
வானூர்: வானூர் தொகுதி அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிளியனூர் கடை வீதியில் நடந்தது.சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பக்தவச்சலம், சதீஷ்குமார், கண்ணன், ராமதாஸ், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் சின்னைய்யா, பேச்சாளர் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமன், மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, வர்த்தக அணி செயலாளர் செல்லப்பெருமாள், மண்டல ஐ.டி.,பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், மாவட்ட பிரதிநிதி பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
25-Dec-2024