எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு சார்பில், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு அஞ்சலி மற்றும் உலக எச்.ஐ.வி., தடுப்பு நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட திட்ட மேலாளர் பிரேமா வரவேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்மாள், சுகாதார துறை துணை இயக்குநர் சுதாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவஞானம், மருத்துவ அலுவலர்கள் விஷ்ணுகுமாரன், ரவிராஜா, தொண்டு நிறுவன நிர்வாகிகள் நந்தகுமார், பத்மாவதி முன்னிலை வகித்தனர்.மாவட்ட சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா விழிப்புணர்வு நிகழ்வை துவக்கி வைத்து, எய்ட்ஸ் நோய் பாதிப்பு, தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினார். எய்ட்ஸ் நோய் பாதிப்பால் இறந்தவர்களுக்கு மெழுகு வத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, கையெழுத்து பிரசாரமும், எய்ட்ஸ் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 50 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.