உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

திண்டிவனம்: காரில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், தழுதாளி கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வானுார் தாலுகா வைரம்பட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன், 28; என்பவர் மாருதி ஸ்விப்ட் காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை