உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்,;திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் யுவராஜ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ரோஷணை இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், பா.ஜ.,சார்பில் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ், நகர பா.ம.க.,செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.,சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தாலுகா மற்றும் நகரப்பகுதியில் எந்தெந்த இடங்களில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் என்பது குறித்து, ஆலோசனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை