உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திண்டிவனம்: திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. திண்டிவனம் புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட் டி, கடந்த 1996ம் ஆண்டு பிளஸ் 2 கணிதம், உயிரியியல் பாடப்பிரிவு மாணவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் வரவேற்றார். முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக்கு கல்வி உபகரணங்களுக்காக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை