உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குமளம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

குமளம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கண்டமங்கலம்; கண்டமங்கலம் ஒன்றியம் குமளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மன்ற தொடக்க விழா மற்றும் சந்திப்பு விழா நடந்தது. இப்பள்ளியில் கடந்த, 33 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவ-மாணவியர் ஒன்றிணைந்து நடத்திய விழாவிற்கு, முன்னாள் மாணவர் விசா ஏழுமலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லதா முன்னிலை வகித்தார். மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான கடலுார் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், மன்ற பெயர்பலகையை திறந்து வைத்து, முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய, ரூ.1 லட்சம் மதிப்பள்ள ஸ்மார்ட் போர்டை, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்து சிறப்புரையாற்றினார். வெங்கடேசன் மன்ற நோக்கவுரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளை செந்தில்குமார் தொகுத்து வழங்கினார். முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் மோகன், மற்றும் முன்னாள் மாணவ-மாணவியருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் பாண்டுரங்கன், கோ. பாண்டுரங்கன், கங்காதரன், கலியவரதன், பக்கிரி, அரவிந்த லோசனன், பாலு, ஜோதி, வேலுமணி, வேம்பு ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி, பூரண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் முழங்க விழா மேடைக்கு அழைத்து வந்தனர். விழாவில் முன்னாள் மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் தங்களுக்கு அர்ப்பணிப்போடு நடத்திய பாடம், கற்பித்த போதனைகள், ஒழுக்கம் உள்பட தங்கள் பள்ளிப்பருவ பசுமையான நினைவுகளை மன நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். வேணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை