உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பட்டா கத்தியுடன் வந்த முதியவர்

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பட்டா கத்தியுடன் வந்த முதியவர்

சங்கராபுரம்: சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று பட்டா கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று முதியவர் ஒருவர் வந்தார். அலுவலக வாயிலில் நின்றிருந்த முதியவர், கையில் இருந்த மஞ்சள் பையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து காட்டி, ''வில்லங்க சான்று கேட்டு 3 மாதங்கள் ஆகியும் தராமல் இழுத்தடித்து வருகிறீர்கள்'' என்று சொல்லிபடி வெளியே சென்றார்.தகவல் அறிந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு அங்கு சென்று பட்டா கத்தியுடன் மிரட்டும் தொணியில் பேசிய சங்கராபுரம் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்த கணபதி, 60; என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை