அங்கன் வாடி மைய கட்டடம் திறப்பு விழா
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே அங்கான் வாடி மையகட்டடம் திறப்பு விழா நடந்தது.மேல்மலையனுார் அடுத்த தென்பாலை ஊராட்சி மல்லாண்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 14.31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது.புதிய கட்டடத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்து பேசினார். ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கலா, ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.