உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனிச்சம்பாளையம் சாலை பஞ்சரானதால் அவதி

அனிச்சம்பாளையம் சாலை பஞ்சரானதால் அவதி

விழுப்புரம், : விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் செல்லும் சாலை பஞ்சராகி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட அனிச்சம்பாளையம் பகுதிக்குச் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும், தோண்டிய இடங்களில் மட்டும் சாலை பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது.இந்த பேட்ச் ஒர்க்கை சரியாக செய்யாததால், தற்போது சாலையில் பெரியளவு பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள், வேன்கள் என அனைவரும் அச்சத்துடனயே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.எனவே, அனிச்சம்பாளையம் செல்லும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை