மேலும் செய்திகள்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
08-Aug-2025
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரத்தில் அண்ணா அறிவகம் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உத்தரவின்படி, மாவட்டங்கள் தோறும் தி.மு.க., ஐ.டி.விங் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில், அண்ணா அறிவகம் என்ற பெயரில் மாவட்ட ஐ.டி.விங்., அலுவலகம் திறக்கப்பட்டது. விழுப்புரம் நகரம் பானாம்பட்டு சாலையில் தொடங்கியுள்ள புதிய அண்ணா அறிவக திறப்பு விழாவிற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர் துரை கி.சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுரேஷ் செல்வராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஐ.டி., விங் குழுவினரின், டிஜிட்டல் பிரசார பணிகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, நகர செயலாளர்கள் வெற்றிவேல், ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், கப்பூர் ராஜா, முரளி, மைதிலி ராஜேந்திரன், கிளியனுார் ராஜி, திருவக்கரை பாஸ்கர், கணேசன், புஷ்பராஜ், பேரூராட்சி செயலாளர் ஜீவா, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் ரமீஸ்ராஜா, மக்களன்பன், சசிரேகா பிரபு, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் ஆனந்த்ராஜ், விஜயகுமார், குருராமலிங்கம், வீரமணிகண்டன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
08-Aug-2025