உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா

விழுப்புரம், : விழுப்புரம் நாப்பாளைய தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் 150ம் ஆண்டு விழா நடந்தது.விழா, நேற்று முன்தினம் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை 4:30 மணிக்கு சிறப்பு கொடி பவனியோடு கிறிஸ்தவர்கள் திரு.வி.க., வீதியில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து திருப்பலி, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிதாசன், பால்தெலாமூர் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று முதல் வரும் டிசம்பர் 2ம் தேதி வரை தேர்பவனி, திருப்பலி நடக்கிறது.வரும் 3ம் தேதி காலை 7:30 மணிக்கு பெருவிழா கூட்டு பாடல் திருப்பலியும், மாலை 5:30 மணிக்கு திருப்பலி, புனித தேர்பவனி நடக்கிறது. மறுநாள் 4ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியிறக்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, கிறிஸ்தவர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ