மேலும் செய்திகள்
பட்டமளிப்பு விழா
20-Apr-2025
செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி குத்து விளக்கேற்றினர். பொறியியல் கல்லுாரி முதல்வர் பாவேந்தன் வரவேற்றார். திரைப்பட நடிகர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சிறந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், பேராசிரியர் முருகதாஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சசிகுமார் நன்றி கூறினார்.
20-Apr-2025