உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சேதமடைந்து வரும் சமுதாய நலக்கூடம் சமூக விரோத செயல்கள் அரங்கேற்றம்

சேதமடைந்து வரும் சமுதாய நலக்கூடம் சமூக விரோத செயல்கள் அரங்கேற்றம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தந்தை பெரியார் நகரில் பழுதடைந்து, நீண்ட காலமாக மூடி கிடக்கும் சமுதாய கூடம் சமுக விரோதிகளின் கூடாரமாக மாறியது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்காக, தந்தை பெரியார் நகரில் கடந்த 1995ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய சமுதாய கூடம் கட்டினர்.இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கு, தந்தை பெரியார் அரசு போக்குவரத்து கழக சமுதாய கூடம் என்ற பெயரிட்டு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அரசு போக்குவரத்து ஊழியர்களின் குடும்ப நிகழ்ச்சிகளும், குறைந்த வாடகைக்கு பொதுமக்களுக்கும் சமுதாய கூடம் அளிக்கப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த சமுதாய கூடம் திடீரென மூடப்பட்டது. இதனால் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக சமுதாய கூடம் பயன்பாடு இன்றி மூடி கிடக்கிறது. கட்டடங்களும் சேதமடைந்து, சுவர்கள் மீது மரம், செடி கொடிகள் வளர்ந்தது. சமுதாய கூடத்தை சுற்றிலும், காடுபோல செடி கொடிகள் ளவர்ந்துள்ளது. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் உலா வருகிறது. சமூதாய நலக்கூடம் நீண்டகாலமாக பூட்டி கிடப்பதால், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. மூடி கிடக்கும் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய சமுதாய கூடம் அல்லது பொது மக்கள் பயன்பாட்டிற்கான கட்டடம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ