உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு வீரர்களுக்கான முதல்வர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

விளையாட்டு வீரர்களுக்கான முதல்வர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம்: முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது மற்றும் தங்கப் பதக்கம் பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:தமிழகத்தில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண், 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி, இயக்குனர், ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. மேலும், தலா 1 லட்சம் ரூபாய் பரிசும், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் விளையாட்டுத் துறை வழங்கி வழங்கி வருகிறது.இது தவிர, போட்டிகளை நடத்தும் நிறுவனம், நன்கொடையாளர், ஆட்ட நடுவர் ஆகியோர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2022-23ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் 2 முறை தமிழ்நாடு அணியின் சார்பாகக் கலந்துகொண்டு, இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.மேலும், விருதுக்கு முந்தைய 3 ஆண்டுகளில், விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும்.விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் 'முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 11ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் விழுப்புரம் என்ற முவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கேட்டு பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ