மேலும் செய்திகள்
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
22-Nov-2024
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருது பெற தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.வரும் 2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கவுள்ள கபீர் புரஸ்கார் விருது பெற தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் மட்டுமே வரும் 15ம் தேதி அல்லது அதற்கு முன்பாக அனுப்பிவைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருது பெற தகுதியானோர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் மூலம் வரும் ஜன., 26 ம் தேதி குடியரசு தினத்தில் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் உரிய கால கெடுவுக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
22-Nov-2024