உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சட்ட உதவி அலுவலகத்தில் காலி பணியிட விண்ணப்பம் வரவேற்பு

சட்ட உதவி அலுவலகத்தில் காலி பணியிட விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி வெளியிட்ட செய்திக்குறிப்பு :விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கீழ் இயங்கும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.இங்குள்ள அலுவலக உதவியாளர் மற்றும் கிளர்க் ஒரு பணியிடமும், அலுவலக பியூன் 2 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. இந்த காலி பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://villuppuram.dcourts.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பதவிகளுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22ம் தேதி மாலை 5.00 மணிக்குள் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், விழுப்புரம் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை