பணி நியமன ஆணை
விழுப்புரம்: தேர்வாணையம் மூலம் தேர்வான இளநிலை உதவியாளர்களுக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், பணி ஆணை வழங்கினார்.அமைச்சுப்பணி தொகுதி-4 தேர்வில் வெற்றி பெற்ற 20 பேர், ஊரக வளர்ச்சி அலகிற்கு இளநிலை உதவியாளர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவை கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் ராஜா உடனிருந்தனர்.