அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா
வானுார், ; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கலை திருவிழா துவக்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள, 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 'கலையால் கல்வி செய்வோம்' எனும் தலைப்பில், கலை திருவிழா நடத்த தமிழக உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் படி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில், வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கலைத்திருவிழா துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மாணவர்கள், 7 பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் ஓவியம், இசை, பொம்மலாட்டம், சொல்லிசை உள்ளிட்ட 32 போட்டிகளில், பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய சேர்மன் உஷா முரளி விழாவை துவக்கி வைத்து, மாணவர்கள் கல்வி கற்பதோடு மட்டுமில்லாமல், கலை திறனையும் வளர்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நுண்கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரி நன்றி கூறினார்.