மேலும் செய்திகள்
ராகுல் கைது கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
22-Jul-2026
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ஆரிய வைசிய சமாஜ், மகிளா சபா நிர்வாகிகள் தேர்வு செய்யும் சிறப்பு கூட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, செயல் தலைவர் ஹரிஹரன், புனர்பூச தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். ஆரிய வைசிய சமாஜ் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர். அவலுார்பேட்டை ஆரிய வைசிய சமாஜ் புதிய தலைவராக செல்வராஜ், தலைவராக வாசுதேவன், செயலாளராக சீனுவாசன், பொருளாளராக தண்டபாணி, துணைத் தலைவராக சீனுவாசகுப்தா, துணைச் செயலாளராக உமாபதி, துணைப் பொருளாளராக முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டனர். இதே போன்று மகிளா சபாவிற்கு ரேவதி, துளசி, சங்கீதா, தீபா, துணை தலைவராக லதா, துணைச் செயலராக புஷ்கலா, துணைப் பொருளாளராக புஷ்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
22-Jul-2026