உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயி மீது தாக்குதல்

விவசாயி மீது தாக்குதல்

விழுப்புரம், : விழுப்புரம் அருகே நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ், 37; விவசாயி. இவரது பெரியப்பா முத்துராமன், 62; இவர்களுக்கு இடையே பொது விவசாய கிணற்றில், தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது. கடந்த 4ம் தேதி, தங்களின் பொது விவசாய நிலத்தில் உள்ள மோட்டாருக்கான மின்சார பெட்டிக்கு மூடி அமைப்பதற்காக, இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, தாக்கிக்கொண்டனர். முத்துராமன் தாக்கியதில், பிரகாஷ் பலத்த காயமடைந்தார்.விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரகாஷ் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், முத்துராமன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !