உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவெண்ணெய்நல்லுாரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லுாரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.ஐ., அலுவலகம் முன்பு நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் தனபால் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் கலியமூர்த்தி, கிளை துணைத்தலைவர் வேதகிரி, கிளை துணை துணை செயலாளர் கவிதா பாலு, கிளை பொருளாளர் மங்கவரத்தால், கிளை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். இதில் திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆமூர் ஊராட்சி துலக்கம்பட்டு கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் ஊர்வலமாக சென்று வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை