உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாநில நிர்வாகக் குழு கூட்டம்

ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாநில நிர்வாகக் குழு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சதீஷ்அப்பு வரவேற்றார். மாநில அமைப்பாளர் முருகானந்தம், பொதுச் செயலாளர் மகேஷ், பொருளாளர் மூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் சக்திவேல் சிறப்புரையாற்றினர். விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழகம் முழுதும் ஹிந்து சமுதாய ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையை ஏற்படுத்துதல். மாநிலம் முழுதும் ஹிந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தி உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை