உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலுார்பேட்டை வார சந்தை ரூ.30.36 லட்சம் ஏலம் போனது

அவலுார்பேட்டை வார சந்தை ரூ.30.36 லட்சம் ஏலம் போனது

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் வாரசந்தை ரூ.30.36 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.அவலுார்பேட்டையில் புதன் கிழமை தோறும் நடக்கும் வாரசந்தையில் காய்கனி கடைகள் , கால் நடைகளுக்காக சுங்கம் வசூலிப்பதற்கான ஏலம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது.மண்டல துணை பி.டி.ஓ., கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தார்.டெபாசிட் செலுத்திய 27 நபர்களில் அதிக தொகை ஏலம் கேட்ட கோ.பள்ளவூர் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் என்பவருக்கு 30 லட்த்து 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டு 32 லட்சத்து 1,000 ரூபாய்க்கு சந்தை ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ