சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பேனர்
விழுப்புரம்: விழுப்புரத்தில் சைபர் கிரைம் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர பேனர்களை போலீசார் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் நுழைவு வாயில் அருகே சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு விளம்பர பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் ஆகியோர் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடமான எஸ்.பி., அலுவலகம் அருகே சைபர் கிரைம் குற்றங்களை தடுத்தல், பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு செய்துள்ளனர். இந்த பேனர்களில் 'க்யூஆர் கோடு' ஸ்கேனுடன் சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடக்கும் மோசடிகள், டிஜிட்டல் அரஸ்ட் குறித்து விழிப்புணர்வு குறும்படம், சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930, www.cybercrime.gov.inகுறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.