உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சிங்கனுாரில் குழந்தை திருமணம் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், விழுப்புரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்பாள் தலைமை தாங்கினார்.மாவட்ட சமூக நல மகளிர் அதிகார மைய ஒருங்கிணப்பாளர் கெஜலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் பத்மாவதி, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார்.முகாமில், பாலின சமத்துவ ஆலோசகர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். இறுதியில் குழந்தை திருமணம் ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. மரக்காணம் ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் விஜயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி