விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்; உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.விழுப்புரம் அடுத்த மேலக்கொந்தை ஆர்.சி.,துவக்கப் பள்ளியில் மரக் கன்றுகள் நடு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொன்னி விண்ணரசி தலைமை தாங்கினார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி ஆற்றுப்படுத்துனர் அசோக்குமார் தலைமையில், சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.மனிதம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு குமார், மாணவ, மாணவிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கினார்.