அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு
விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதை யொட்டி, நேற்று மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் கனகசபாபதி முன்னிலை வகித்தார். டாக்டர் திருமாவளவன் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் விதிமுறைகள் குறித்து விளக்கினர். நிறைவாக,விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி ஒருங்கிணைத்தார். உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா நன்றி கூறினார்.