மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
04-Jul-2025
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆங்கில துறை தலைவர் ஸ்ரீதேவி வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் கனகசபாபதி முன்னிலை வகித்தார். கீழ்பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோதி மாணவர் உடல் மற்றும் மன நலம் குறித்தும், சரோஜினி கல்வி தொண்டு நிறுவன இயக்குனர் ரோஸி அருள்ராஜ் கல்வி செயல்பாடுகள் குறித்தும் விளக்கினர்.சமூக பணியாளர் வாசுகி பாலியல் தொந்தரவுகள், போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் பாதுகாத்து கொள்ளும் முறைகள் பற்றியும், சுகாதார ஆய்வாளர் ராகவன், சுகாதார விழிப்புணர்வு பற்றியும் பேசினர். உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா தொகுத்து வழங்கினார். கணினி துறை தலைவர் பாரதி நன்றி கூறினார்.
04-Jul-2025