உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கலை கல்லுாரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வானுார் அரசு கலை கல்லுாரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வானுார் : வானுார் அரசு கலை கல்லுாரி , மாணவிகளுக்கான மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருச்சிறம்பலத்தில் இயங்கி வரும் வானுார் அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம், விழுப்புரம் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லுாரியில் பயிலும் மாணவிகளுக்கான மாதவிடாய் கால சுகாாதர மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் பிரச்னைகள், சவால்கள் மற்றும் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் அருளதமும் வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் வீரசேகரன், வட்டார இயக்க மேலாளர் ராஜலட்சுமி, பாலின வள மைய மேலாளர் வரலட்சுமி, மாநில பயிற்றுநர் நாராயணவடிவு ஆகியோர் கலந்து கொண்டு, பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறார்கள், மாதவிடாய் காலத்தில் சுகாதார ரீதியாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர்.இறுதியாக பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உதவிப்பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ