மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
17-Jan-2026
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைமை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன் முன்னிலை வகித் தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அழகுவேல் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் டாக்டர்கள் திருமாவளவன், கோவிந்தராஜூ, சிவக்குமார், வெங்கடேஷ், ஜோதி ஆகியோர் இன் றைய சமூகத்தில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தற்கொலை எண்ணத்தினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மாணவர்களிடையே வி ளக்கி பேசினார். கல்லுாரி மாணவ, மாணவிகள் போதை தடுப்பு குறித்து உறுதிமொழியேற்று, பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். கல்லுாரி முதல்வர்கள் அன்பழகன், பாலாஜி, மதன்கண்ணன், வெங்கடேஷ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
17-Jan-2026