விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை எஸ்.பி., சரவணன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், பள்ளி மாணவ, மாணவியர், லஞ்சம் வாங்குவது குற்றம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் போன்ற ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று, புதிய பஸ் நிலையத்தில் முடிந்தது. நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் மதன்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.