உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

மயிலம்: போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணத்தில் உள்ள பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டிஜாய் தலைமை தங்கினார். விழுப்புரம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் இளமுருகன், திண்டிவனம் அனைத்து மகளிர்போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி ஆகிய இருவரும் போதைப்பொருள் தடுப்பு குற்றவியல் தடுப்பு நடவடிக்கை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம், இளம் பெண் திருமணம் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பவ்டா கல்வி குழும இயக்குனர் பழனி, துணை முதல்வர் சேகர், பவ்டா நிர்வாக அலுவலர் ் மோகனசுந்தரம் ஆகியோர் பேசினர். எச்.ஓ.டி.,க்கள் நெல்சன் மரிய சவுரி, பாலகணேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். என்.சி.சி., அலுவலர் கார்த்திக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை