உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழுப்புரம்: புலம்பெயர் செங்கல் சூளை தொழிலாளர்களின் பணியிட வசதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, நிர்வாக செயலாளர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். விடியல் சங்க கவுரவ தலைவர் மாரி வரவேற்றார். கருத்தரங்கில் தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், குழந்தை பாதுகாப்பு, வங்கி சேவைகள், கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. முத்திரை ஆய்வாளர் சார்லி, தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து கூறினார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்ட உரிமைகள், பதிவு நடைமுறைகள் பற்றியும் விளக்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் தர்மேந்திரன் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி தடைபட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளது என்பது குறித்து விளக்கினார். வழக்கறிஞர் தென்பாண்டியன், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு, அரசு துறைகள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் பற்றி விளக்கினார். திருவள்ளுவர் சிறுவர் நீதிக்குழு உறுப்பினர் செந்தில், குழந்தைகளின் உரிமைகள், சட்ட பாதுகாப்பு பற்றி கூறினார். டாக்டர் தமிழரசன் வாழ்த்தி பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணியப்பன், குபேர், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ