உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அய்யனாரப்பன் கோவில் கும்பாபிேஷகம்

அய்யனாரப்பன் கோவில் கும்பாபிேஷகம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே அய்யனாரப்பன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கொண்டனர். முண்டியம்பாக்கம், சர்க்கரை ஆலை சாலையில் அமைந்துள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் சுவாமி கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜூலை, 29ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி காலை கோவில் கலசம் மற்றும் கோவில் வளாகத்திலுள்ள வினாயகர், முருகன், ஐயப்பன், சப்த கன்னிகள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. கோலியனுார் சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜை மற்றும் அபிேஷகங்களை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ