பாரதிய கிசான் சங்க மாநில நிர்வாகிகள் பயிற்சி கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், தமிழ்நாடு பாரதிய கிசான் சங்க மாநில அளவிலான நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடந்தது.மாநில தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சீனிவாசன், மாநில பொருளாளர் ராம்நாத், அமைப்பு செயலாளர் குமார், மாநில செயலாளர்கள் முருகன், சீமான், துணைத் தலைவர்கள் லோகநாதன், கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தமிழக அரசு, விவசாய மின் இணைப்பு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்;பிரதமர் விவசாய ஊக்க நிதி தகுதியான நபர்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அரசு, சன்ன மற்றும் மோட்டா ரக நெல்லுக்கான ஆதரவு விலையை கூடுதலாக்கி தருவதோடு, சட்டபூர்வ அந்தஸ்தும் தர வேண்டும்; என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.