பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரத்தில் சைக்கிள் போட்டி
விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி, வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. கோலியனுார் கூட்ரோடு பகுதியில், வரும் 4ம் தேதி காலை 7:00 மணிக்கு போட்டி துவங்கப்படும்.இதில், 13 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் ரொக்கத் தொகை மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுவோருக்கு, தலா ரூ.250 பரிசளிக்கப்படும்.பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெறப்பட்ட வயதுச் சான்று மற்றும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும்.மேலும், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 8675773551, 7401703485 ஆகிய மொபைல் போன்கள் மூலம் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.