உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் அரிசி கடத்தல்: பீகார் வாலிபர்கள் கைது

ரேஷன் அரிசி கடத்தல்: பீகார் வாலிபர்கள் கைது

விழுப்புரம்: வானுார் அருகே மினி வேனில் ரேஷன் அரிசி கடத்திய பீகார் மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்து, 55 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.வானுார் அருகே கிளியனுார் மதுவிலக்கு சோதனை சாவடி வழியாக நேற்று மினி வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்வதாக விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில், போலீசார் மதியம் 1.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மினி வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 40 கிலோ எடை கொண்ட 55 ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் 2,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்தவர் உட்பட மூவரை பிடித்து விசாரணை செய்தனர்.பீகாரை சேர்ந்த அஜித், 32; சஞ்சய் பாகி, 30; பசந்த் குமார்,33; ஆகிய மூவரை கைது செய்தனர். ரேஷன் அரிசி மூட்டை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ