உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துளசிஸ்ரீதர்,31; கொத்தனார். இவர், கடந்த 9ம் தேதி விழுப்புரத்தில் உள்ள கே.கே.ரோடு பகுதியில் தனது ஹோண்டா பைக்கை நிறுத்திவிட்டு, கட்டட வேலைக்கு சென்றார். மீண்டும் மாலை வந்து பார்த்தபோது, அவரது பைக் திருட்டுபோனது தெரியவந்தது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ