உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., நிர்வாகி மாயம் மனைவி போலீசில் புகார்

பா.ஜ., நிர்வாகி மாயம் மனைவி போலீசில் புகார்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வேலைக்குச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என மனைவி போலீசில் புகார்.திண்டிவனம் அடுத்த செ.கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38; மயிலம் ஒன்றிய பா.ஜ., இளைஞரணி தலைவர். கார்பரேட் நிறுவன கட்டடங்களுக்கு 'எலவேஷன்' வேலை செய்து வருகிறார்.இவர், கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி பெரம்பலுார் மாவட்டத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், மாதம் தோறும் வீட்டிற்கு தேவையான பணத்தை அனுப்பி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி மனைவியுடன் போனில் பேசியுள்ளார். அதன்பிறகு, அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது.இதுகுறித்து அவரது மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ