உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை; தமிழக அரசு மீது பா.ஜ., தலைவர் பாய்ச்சல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை; தமிழக அரசு மீது பா.ஜ., தலைவர் பாய்ச்சல்

மரக்காணம் : விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் உப்பளங்களை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பெஞ்சல் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக மரக்காணம் உப்பளம் பகுதி, விவசாய பயிர்கள், இறால் பண்ணைகள், பெரிதும் பாதிப்படைந்துள்ளன. தண்ணீர் வெளியேறும் பகுதிகள் துார்வாரப்படவில்லை.சாத்தனுார் அணையில் இருந்து நள்ளிரவில் நீரை திறந்துவிட்டால் மக்களுக்கு எப்படி தகவல் சென்றடையும், 38 கிராமங்களுக்கு மேல் தண்ணீர் புகுந்துள்ளது, தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததுதான் இதற்கெல்லாம் காரணம்.சாத்தனுார் அணை, பவானிசாகர் அணைகளில் முழு கொள்ளளவில் சேறும் சகதி அதிகமாக உள்ளது. மாநில அரசு இதை துார் வாருவதே கிடையாது. மாநில அரசு டி.ஐ.பி.ஆர்., என்ற ஒரு அமைப்பை வைத்துள்ளது. அந்த அமைப்பின் முக்கிய வேலை, உதயநிதி எங்கே செல்கிறாரோ அதை போட்டோ எடுத்து பகிர வேண்டும் என்பதே. சேதங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான பிரச்னைகள் ஆகியவற்றை கணக்கில் காட்டவில்லை.புயல் பாதிப்பு பற்றி கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுவர். நிதி கேட்டும் வழங்கவில்லை என குறை கூறுவர். வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய அரசின் குழு ஒரு வாரத்திற்குள் வர உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழக அரசு 2000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளது. மத்திய அரசு ஆய்வு செய்தபிறகு, உரிய நிதியை நிச்சயமாக வழங்கும். நடிகர் விஜய் புயல் பாதிப்பு குறித்து நேரடியாக மக்களை சந்திக்கவில்லை. அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 05, 2024 06:37

இவருக்கும் வேற வேலையில்லை. குஜராத்தில், உ.பி ல, பிஹாரில், அசாமில் வெள்ளம் வந்தால் வாயை மூடிக்கிட்டு இருப்பார்.


முக்கிய வீடியோ