உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஊர்வலம் 

திண்டிவனம்: திண்டிவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடந்தது. வடக்கு மாவட்டம் சார்பில், தாலுகா அலுவலகத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் முரளி ரகுராமன், வழக்கறிஞர் செந்தில், தென்கோடிப்பாக்கம் ஊராட்சி தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, காந்தி சிலை அருகே முடிந்தது. பின், காந்தி சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !