உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேவிபாலா ஓட்டலில் கருப்பட்டி காபி மையம் 

தேவிபாலா ஓட்டலில் கருப்பட்டி காபி மையம் 

விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே திருச்சி மெயின்ரோடு தேவிபாலா ரெசிடன்சி ஓட்டலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமுது கருப்பட்டி காபி மையம் திறப்பு விழா நடந்தது.தேவிபாலா ரெசிடன்சி உரிமையாளர் சீதாராமன், பத்மாவதி வரவேற்றனர். விசாலாட்சி பொன்முடி, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலர் கவுதம சிகாமணி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர செயலர் சக்கரை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் அமைச்சர் பொன்முடி புதிய அமுது கருப்பட்டி காபி மையத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.தொடர்ந்து, கருப்பட்டி மைய இனிப்பு மற்றும் இயற்கை அங்காடியும் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ