உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெகநாத் சிண்டேவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், திண்டிவனம் தாலுகா மருந்து வணிக சங்கம் ஆகியன இணைந்து சிறப்பு ரத்ததான முகாமை நடத்தியது. ரத்த வங்கி பொறுப்பாளர் சுதாகரன் தலைமையில் 10 பேர் ரத்ததானம் செய்தனர். முகாமில், மருந்து வணிகர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் செந்தில்நாதன், வெங்கட், விஜயபாஸ்கர், இக்பால், லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ