மேலும் செய்திகள்
திருக்கோவிலுாரில் ரத்ததான முகாம்
24-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு, மாவட்ட செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார். பொருளாளர் காத்தவராயன் வரவேற்றார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர்கள் ஆகாஷ், முகமது அலி, இளைஞர் பெருமன்றம் மணிகண்டன், அதியமான், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முகாமை தொடங்கி வைத்தார். விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, இளைஞர் பெருமன்றம் கீர்த்தி, ஞானகுமார், அருண்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.
24-Mar-2025