உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சக்திக்கு மீறி கடன் வாங்கியவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

சக்திக்கு மீறி கடன் வாங்கியவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

மயிலம்: அதிகளவில் கடன் வாங்கி திரும்ப கொடுக்க முடியாததால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த உள்ள ஒளவையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஸ்ரீதர், 35; வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலை 8:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஏரியில் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்த மயிலம் போலீசார் நடத்திய விசாரணையில், தொழில் விஷயமாக பலரிடம் கடன் வாங்கிவிட்டு கொடுக்க முடியாததால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ