உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட சிறுவன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பீகார் மாநிலம், பர்குவா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரசகானி மகன் கொலுகுமார், 17; இவர், விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான நான்கு வழிச்சாலை பணியில், தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் தங்கி, பணியில் ஈடுபட்டு வந்தார். இவர், நேற்று எதிர்பாராத விதமாக ஜெனரேட்டர் ஒயரை மிதித்த போது, மின்சாரம் தாக்கியது.இதில் துாக்கி வீசப்பட்ட அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, கொலுகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை