உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காலை உணவு திட்டம் ஒன்றிய சேர்மன் ஆய்வு

காலை உணவு திட்டம் ஒன்றிய சேர்மன் ஆய்வு

செஞ்சி: செஞ்சி அடுத்த மீனம்பூர் அரசு துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, உணவை சாப்பிட்டு உணவின் தரம் குறித்து சோதித்தார். சிறுவர்களுக்கு உணவு பரிமாறினார். தொடர்ந்து உணவை கவனமுடனும், தரமாகவும் தயாரிக்கும்படி கேட்டு கொண்டார். ஆய்வின் போது ஊராட்சி தலைவர் முன்வர், தலைமை ஆசிரியர் பதுரூன், ஒன்றிய பொருளாளர் இக்பால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வாகித், இளைஞர் அணி அமைப்பாளர் லியாகத், சத்துணவு பணியாளர் அமலு ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ