உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. கண்காட்சியை இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் திருமாவளவன், சவுந்தர்ராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். டாக்டர்கள் கோவிந்தராஜ், சிவக்குமார், கீழ்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜோதி உள்ளிட்டோர் மார்பக புற்றுநோய் குறித்த தகவல்களை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர். தொடர்ந்து, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மற்றும் எவ்வாறு அறிகுறிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் விளக்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா , உதவி தலைமை ஆசிரியர் மாலா ராணி, கீழ்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை